டெல்லி : மக்களவையில் உரையை முடித்த கையோடு ராகுல் காந்தி flying kiss (பறக்கும் முத்தம்) கொடுத்ததாக பெண் எம்.பிக்கள் சபாநாயகரிடம் புகார் அளித்து உள்ளனர். மக்களவையில், எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் இன்று (ஆகஸ்ட். 9) நடைபெற்றது.
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை முன்மொழிந்து தொடங்கி வைத்தார். இதை அடுத்து, அண்மையில் மக்களவையில் இணைந்த ராகுல் காந்தி உரையாற்றினார். மேகநாத், கும்பகர்ணன் ஆகிய இருவரின் பேச்சை கேட்டு ராவணன் நடந்ததுபோல் பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷா மற்றும் கவுதம் அதானி ஆகிய இருவரின் பேச்சை மட்டும் கேட்டு நடப்பதாக ராகுல் காந்தி மக்களவையில் குறிப்பிட்டார்.
மக்களின் குரலாக காணப்படும் இந்தியாவில், மணிப்பூரில் பாரத மாதாவை பாஜகவினர் கொன்றுவிட்டதாக தெரிவித்தார். மேலும் பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல மாறாக அவரை கொன்றவர்கள் என்று ராகுல் கூறினார். மணிப்பூரை எரித்தது போல் தற்போது அதே செயலை அரியானாவிலும் பாஜகவினர் மேற்கொண்டு வருவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
உரையை முடித்துக் கொண்ட ராகுல் காந்தி, அவையில் இருந்த பெண் உறுப்பினர்களை நோக்கி flying kiss கொடுத்ததாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, "நான் ஒன்றை ஆட்சேபிக்கிறேன். எனக்கு முன் பேசியவர் அநாகரீகமாக நடந்து கொண்டார்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உள்ள போது நாடாளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுப்பது பெண் மீது வெறுப்பு கொண்ட நபரால் மட்டுமே முடியும். இதற்கு முன் இது போன்ற கண்ணியம் மற்ற நடத்தை ஒருபோதும் நாடாளுமன்றத்தில் நான் பார்த்தது இல்லை என்று கூறினார்.
மற்றொரு பெண் உறுப்பினரான சோபா கரண்டலஜே, ராகுல் காந்தி அவையை விட்டு வெளியேறும் முன் அனைத்து பெண் உறுப்பினர்களுக்கும் சேர்த்தார் போல் ராகுல் காந்தி flying kiss கொடுத்துவிட்டு சென்றார். இது அநாகரீகமான செயல், ஒரு உறுப்பினரின் ஒழுங்கீனமான செயல் என்று தெரிவித்தார். ராகுல் காந்தி flying kiss கொடுத்தது குறித்து பெண் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :"பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல.. அவரை கொன்றவர்கள்.." மக்களவையில் ராகுல் காந்தி காட்டம்!