டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் உள்ள28 வயது இளம்பெண் தனது 35 வயது கணவரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை கண்ட அவர்களது 12 வயது மகள், உறவினர்களுக்கு தெரிவிக்கவே, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
கணவனின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த இளம்பெண் - Woman cut husband penis
உத்தரகாண்ட் மாநிலத்தில் 28 வயது இளம்பெண் தனது கணவரின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![கணவனின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த இளம்பெண் woman-kills-husband-cutting-off-his-genitals-in-Uttarakhand](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14510560-900-14510560-1645257023327.jpg)
கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறை தரப்பில், "கணவனின் குடிப்பழக்கம் காரணமாக இருவக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவ நாளின்போது, கணவன் குடிபோதையில் மனைவியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி, காய்கறி வெட்டும் கத்தியை பயன்படுத்தி பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குடும்பத் தகராறு: மனைவியைக் கொலைசெய்து நாடகமாடிய கணவர் கைது