கேரளா(திருவனந்தபுரம்): பூனைக் கடிக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் சென்ற ஓர் பெண்ணை, சிகிச்சைக்குச் சென்ற இடத்திலேயே நாய் கடித்த சம்பவம் நடந்துள்ளது. விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபர்ணா எனும் இளம்பெண் பூனை கடியால் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று (செப். 29) சென்றார். அப்போது, தடுப்பூசி செலுத்தும் அறையில் படுத்துக் கிடந்த நாயின் வாலை தெரியாமல் மிதித்துள்ளார்.
பூனை கடி சிகிச்சைக்கு சென்ற இடத்தில் நாய் கடிக்குள்ளான இளம்பெண் - கேரளாவில் பெண்ணிற்கு நாய் கடி
கேரளாவில் பூனை கடித்ததால் மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணை அங்கு சுற்றித்திருந்த தெரு நாய் ஒன்று கடித்த சம்பவம் நடந்துள்ளது.
அதனால் கோபமடைந்த அந்த நாய் அந்தப் பெண்ணின் காலில் கடித்தது. இதனையடுத்து அந்தப் பெண்ணிற்கும் அதே மருத்துவமனையில் நாய் கடிக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அபர்ணவைக் கடித்த அந்த நாய் ஆரம் அதே அறையில் வெகு ஆண்டுகளாகத் தங்கிவருவதாகவும், அதற்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றும் அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டுவருவதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: பாம்பு பிடிப்பவரின் உதட்டை கடித்த நாகப்பாம்பு; வைரல் வீடியோ