தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பூங்காவில் பிரசவம்' - ஆசிரியரின் உதவியால் பிறந்த அழகான பெண் குழந்தை - maternal pain

பெங்களூர்: மைசூரில் உள்ள பூங்காவில் கர்ப்பிணிக்கு, பிரசவம் பார்த்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

Woman
பெங்களூர்

By

Published : Mar 9, 2021, 6:23 PM IST

கர்நாடக மாநிலம் கோடாகு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், சொந்த வேலைக்காக, தனது இரண்டு குழந்தைகளுடன் மைசூருக்கு சென்றுள்ளார். அசதியில், அப்பகுதியலுள்ள பூங்காவில் அமர்ந்திருந்த போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தாயின் நிலைமையை பார்த்து சிறுவர்கள் கூச்சலிட்டதும், அங்கிருந்த உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் ஓடோடி வந்து உதவி புரிந்துள்ளார்.

பூங்காவில் அமர்ந்திருந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறப்பு

தொடர்ந்து அங்கிருந்தவர்களின் உதவியுடன், கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்ததில் அவர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது, தாயும் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரியான நேரத்தில் கர்ப்பிணிக்கு உதவிய ஆசிரியருக்கு, பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

இதையும் படிங்க:குழந்தை திருமண சிக்கில் இந்தியாவில் ஓயவில்லை: யுனிசெப்

ABOUT THE AUTHOR

...view details