ஒடிசா:ஒடிசாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது கணவர் இறந்து 52 ஆண்டுகள் கழித்து அவரது கணவரின் ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுள்ளார். தற்போது அந்த மூதாட்டி 89 வயதில் தற்காலிக ஓய்வூதியமாக ரூ.16 லட்சம் பெற்றார்.
ஒடிசாவின்பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஆராத் பஜாரைச்சேர்ந்த லலிதா மொகந்தி என்ற மூதாட்டியின் கணவர் பீம்சென் மொகந்தி 52 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அவரது கணவர் இறந்தபோது அவருக்கு வயது 37ஆகும். அவரது கணவர் ஒடிசா மாநிலப்போக்குவரத்துக்கழகத்தில் (OSRTC) பணிபுரிந்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, ஓஎஸ்ஆர்டிசியில் இருந்து லலிதாவுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை.