உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூர் சிறையிலிருந்த பிரபல பெண் ரவுடி கீதா திவாரி, தியோரியா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறையில் கேங் ஃபார்மேஷன்: பிரபல பெண் ரவடி வேறு சிறைக்கு மாற்றம்! - பிரபல பெண் ரவடி திவாரி தியோரியா சிறைக்கு மாற்றம்
லக்னோ: சிறையிலிருக்கும் பிரபல பெண் ரவடி திவாரி கைதிகளை பல குழுக்களாக மாற்றுவதாக குற்றச்சாட்டப்பட்டு, வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின்படி, சிறைக் கைதிகளை பல குழுக்களாக கீதா மாற்றியுள்ளதாகவும், சிறையில் அவரது செயல்பாடு சரியாக இல்லை எனவும் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சிறை நிர்வாகம் உரிய அனுமதி பெற்றுக்கொண்டு அவரை தியோரியா சிறைக்கு மாற்றியுள்ளனர்.
கீதாவுக்கு கொலை, கொள்ளை எனப் பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ளன. ஆனால், 2019இல் முதியவர் ஒருவர் தனது பேத்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, அவருடன் ஏற்பட்ட தகராறில்தான், கீதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.