தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது - கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை

இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது
கைது

By

Published : Apr 30, 2022, 8:00 PM IST

ஹைதராபாத்: நரசிம்மா (23), இமாம் (20), அப்துல் குத்தூஸ் (21), அம்ரூதின்(21) ஆகிய நான்கு ஆட்டோ ஓட்டுநர்கள், இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று, ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான துண்டிகலில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் ஷோலாப்பூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஆந்திராவில் பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details