டெல்லி: டெல்லியைச் சேர்ந்த 61வயது மூதாட்டி ஆம்புலன்ஸுக்காக நீண்டநேரம் காத்திருந்து உயிரிழந்த சோக நிகழ்வு நடந்ததுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லியைச் மஞ்சு (61) என்பவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அவரது குடும்பத்தார் ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளனர். தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் அவரை அழைத்துச் சென்றாலும், மருத்துவமனைக்கு வெளியே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் காத்திருக்க வேண்டியிருந்தது.
டெல்லியில் மருத்துமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் அவரை மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனைக்கு வெளியே அந்த மூதாட்டி உயிரிழந்துவிட்டார்.
உயிரிழந்த மூதாட்டியின் மகன்பேசும்போது, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தனது தாயை மருத்துவர்கள் அனுமதிக்காததே இறப்புக்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குத் தனியார் ஆம்புலன்ஸ்கள் 35 ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் மருத்துமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வேகமாக பரவும் கரோனா இரண்டாம் அலை- எச்சரிக்கும் மருத்துவர்