பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ப்ரீத்தி குஷ்வா கருக்கலைப்பு மாத்திரையை விழுங்கிப்பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று (டிசம்பர் 13) உயிரிழந்தார். இதுகுறித்து பெங்களூரு போலீசார் கூறுகையில், பெங்களூருவை சேர்ந்தவர் ப்ரீத்தி குஷ்வா(33). இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 11 மாத குழந்தை உள்ளது. இதனிடையே டிசம்பர் 10ஆம் தேதி மருத்துவப் பரிசோதனையின் போது ப்ரீத்தி குஷ்வா கருத்தரித்திருப்பது தெரியவந்தது.
இந்த கருவை கலைக்க ப்ரீத்தி குஷ்வா முடிவு செய்தார். இதனை கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் கலைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், ப்ரீத்தி கருகலைப்பு மாத்திரையை வாங்கி விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையறிந்த கணவர் மருத்துவமனைக்கு செல்லாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ப்ரீத்தி இது வழக்கமானதுதான் என்று கூறி மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார்.