பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து, நேற்று (அக் 31) பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து லக்கிசராய் மாவட்ட ஏஎஸ்பி சையத் இம்ரான் மசூத் கூறுகையில், “உயிரிழந்த பெண் தானாகவே விழுந்தாரா அல்லது வேறு ஏதாவது நடந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இச்சம்பவம் தொடர்பாக மற்றொரு பெண்ணிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.