தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடுக்காட்டில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த கர்ப்பிணி! - kerala news in tamil

சரியான சாலை வசதிகள் இல்லாத சபரிமலை மலைப்பகுதியில் வைத்து பெண் ஒருவருக்குப் பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.

காட்டில் பெண் குழந்தையை ஈன்றெடுத்த கர்ப்பிணி
காட்டில் பெண் குழந்தையை ஈன்றெடுத்த கர்ப்பிணி

By

Published : May 26, 2021, 10:48 AM IST

பத்தனம்திட்டா (கேரளா): நடைபாதை வசதிகள் கூட இல்லாத மலைக்கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சபரிமலை வனப்பகுதியில் உள்ள சாலகாயத்தில் 'மலபண்டாரம்' எனும் பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த தனு, சந்தியா தம்பதி வசித்துவருகின்றனர். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த சந்தியாவுக்கு, நேற்று (மே.25) திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அப்பகுதியில் நடந்து செல்வதற்கு கூட நடைபாதை வசதிகள் இல்லை என்பது வருந்ததக்க நிகழ்வாகும்.

இதனிடையே விடாமல் பெய்து வரும் கனமழையும், கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது.

காட்டில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த கர்ப்பிணி

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. சாலை வசதிகளே இல்லாத அந்த மலை கிராமத்து குன்றுகளின் மீது ஏறியும், ஆபத்தான, உயரமான இடங்களிலுள்ள வேர்களைப் பிடித்தும் மருத்துவருடன் சென்ற மருத்துவக் குழு, கர்ப்பிணி இருந்த இடத்தை அடைந்தது.

இருப்பிடத்தை அடைந்த அந்தக்குழு, சற்றும் தாமதிக்காமல் சந்தியாவுக்குப் பிரசவம் பார்த்தது. அதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details