ராஜன்னா சிர்சில்லா:தெலங்கானா மாநிலத்தில், காதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் தனது மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெமுலவாடா ருத்ரவாராம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜிதா என்ற நேஷா (30). பத்து ஆண்டுகளுக்கு இவர், கணினி பயிற்சிக்காக கரீம் நகர் பகுதிக்குச் சென்று வந்தார். அப்போது, முகமது அலி என்ற வாழைப்பழ விற்பனையாளருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்தப் பழக்கம் காதலாக மாறியது.
இருவரும் தங்களது காதலை வீட்டில் தெரிவித்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இருவரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், ரஜிதா வீட்டை விட்டு வந்து முகமது அலியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு முகமது அயன்ஷ் (7), உஷ்மன் முகமது (14 மாதங்கள்) என்னும் இரண்டு மகன்களும், அஷ்ரஷாபின் (5) என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்து சில வருடங்களுக்குப் பிறகு முகமது அலி, ரஜிதாவிடம் வரதட்சணை வாங்கி வரக்கோரி தகராறு செய்துவந்துள்ளார். இதனால், தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் ரஜிதா தனது கணவர் மீது வெமுலவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், தான் இதுபோன்று மீண்டும் நடந்துகொள்ள மாட்டேன் என கணவர் கூறிய நிலையில் காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால், சில தினங்களுக்குப் பின்னர் முகமது அலி மீண்டும் ரஜிதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார். பின்னர், ரஜிதா மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கடந்த 27ஆம் தேதி ரஜிதா வீட்டிற்குச் சென்ற முகமது அலி, வரதட்சணைக் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளை ரஜிதாவின் தாய் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றார்.