தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாசிட்டிவால் பெண் எடுத்த விபரீத முடிவு: தெலங்கானாவில் சோகம் - Telangana State

ஹைதராபாத்: கரோனா சோதனையின்போது பாசிட்டிவ் (தொற்று உறுதி) என முடிவு வந்ததால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிஜாமபாத் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பாசிட்டிவ் காரணத்தால் தற்கொலை செய்துகொண்டவர்
கரோனா பாசிட்டிவ் காரணத்தால் தற்கொலை செய்துகொண்டவர்

By

Published : Apr 27, 2021, 6:37 PM IST

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் போதன் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதுடைய பெண். இவர் கோவிட்-19 பரிசோதனை செய்துகொண்ட நிலையில் இரண்டு நாள்களுக்குப் பிறகு தொற்று உறுதி எனத் தெரியவந்தது. இதனால் எதுவும் நேர்ந்துவிடுமோ என்ற பதற்றத்துடனே அவர் இருந்துள்ளார்.

அதனால், அவர் இன்று (ஏப். 27) காலை தனது கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கரோனா பயத்தால் பலரும் தற்போது தற்கொலை செய்துகொள்ளும் முடிவை மேற்கொண்டுவருவது கவலையை ஏற்படுத்துகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த அலுவலர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றனர். ஆனால் அதையும் மீறி கரோனா தொற்று பயத்தால் தற்கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details