கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் நரேகல் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த வீரய்யா என்பவர் தொடர்ந்து ஆபாச குறுச்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆந்திரமடைந்த அந்தப் பெண் இன்று(மார்ச்.16) வீரய்யா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆபாச குறுச்செய்தி அனுப்பிய இளைஞரை அடித்து உதைத்த பெண்
பெங்களூரு: தனக்கு ஆபாச குறுச்செய்தி அனுப்பிய இளைஞரை, ஒரு பெண் சாலையில் அடித்து உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
woman-beaten-the-young-man-on-the-road
அதையடுத்து அந்தப் பெண் வீரய்யாவை அடித்து உதைத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும், அந்த இளைஞருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்களின் ஆபாச படங்களை பரப்பியவருக்கு பிணை!