திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தை சேர்ந்த கார்த்திக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடுக்கி மாவட்டம் அடிமல்லி பகுதியை சேர்ந்த ஷோபா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், இருவரும் திருமணப் பேச்சை எடுத்துள்ளனர். அப்போது திடுக்கிடும் உண்மை புலப்பட்டுள்ளது. அதாவது ஷோபா தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த கார்த்திக் ஷோபாவுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ஷோபா இறுதியாக ஒருமுறை நேரில் பேச வேண்டும் என்று கார்த்திக்கை அடிமல்லிக்கு அழைத்துள்ளார்.