அமராவதி:ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவில் உள்ள ஜிவி சத்திரம் கிராமத்தில் ரூ. 2,00,000 லட்சம் கடனை திருப்பி செலுத்த தொழிலாளியின் மனைவி குழந்தையுடன் கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஜிவி சத்திரத்தை சேர்ந்த சுப்பாராயுடு என்பவர் அதே பகுதியில் உள்ள நர்சரியில் வேலை பார்த்து வந்தார். அப்போது முன்பணமாக ரூ. 2,00,000 லட்சத்தை அதன் உரிமையாளர் சுதாகர் ரெட்டியிடம் வாங்கியுள்ளார்.
ஆனால், பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சுப்பாராயுடு வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இதனால் உரிமையாளர் சுதாகர் ரெட்டி ஒரு வாரத்திற்கு முன்பு கடனை திருப்பி கேட்க சுப்பாராயுடு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுப்பாராயுடு அங்கு இல்லை. அதனால், வீட்டிலிருந்து சுப்பாராயுடுவின் மனைவி குழந்தையை வலுக்கட்டயமாக தன்னுடன் அழைத்து சென்று, அவருக்கு சொந்தமான இடத்தில் அடைத்துவைத்துள்ளார்.