தமிழ்நாடு

tamil nadu

குஜராத் தேர்தல்: பிரசாரத்தில் ரோபோவை களமிறக்கிய 'பலே' பாஜக வேட்பாளர்

By

Published : Nov 18, 2022, 10:27 PM IST

பாஜக வேட்பாளர், குஜராத் தேர்தலுக்காக ரோபோ மூலம் மக்களிடையே துண்டு பிரசுரம் வழங்க செய்த சம்பவம், காண்போரை கவரச்செய்துள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல்: பிரசாரத்தில் ரோபோவை கலமிறக்கிய பாஜக வேட்பாளர்
பிரசாரத்தில் ரோபோவை கலமிறக்கிய பாஜக வேட்பாளர்

நாடியாட்: குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் கெடா மாவட்டத்தில் உள்ள நாடியாட் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக வேட்பாளர் பங்கஜ்பாய் தேசாய் தேர்தல் பரப்புரையில் ரோபோவை களமிறக்கியுள்ளார். இந்த ரோபோ துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கிவருகிறது.

இந்த யோசனை குறித்து பாஜக வேட்பாளர் பங்கஜ் தேசாய் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தனது உரைகளில் டிஜிட்டல் இந்தியா பிரசாரம் குறித்து அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை நனவாக்க, பிரசாரத்தில் ரோபோவைப் பயன்படுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தல்: பிரசாரத்தில் ரோபோவை களமிறக்கிய 'பலே' பாஜக வேட்பாளர்

பிரசார கூட்டத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கிய இந்த ரோபோவை பாஜக ஐடி குழுவின் மத்திய மண்டலத் தலைவர் தேசாய் தயாரித்துள்ளார். இந்த ரோபோவை மக்கள் வியப்பாக பார்த்துசெல்கின்றனர்.

இதையும் படிங்க:ஆடம்பரமான காரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details