டெல்லி:இந்தியத் தொழில்நுட்பத்தில், உள்நாட்டில் தயாரான முதல் விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்தின் சோதனை ஓட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கப்பலைத் தயாரிக்க 2003ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான இக்கப்பலின் கட்டுமானப் பணி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று முடிந்தது.
மொத்தமாக 14 தளங்களைக் கொண்டுள்ள இந்தக் கப்பலின் எடை 40 ஆயிரம் டன். நீளம் 262 மீ. அகலம் 62 மீ. உயரம் 59 மீ. 2,300-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 1,700 ராணுவ வீரர்கள் தங்கலாம். பெண் அலுவலர்களுக்குச் சிறப்பு அறைகள் உள்ளன.
இக்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ்(ஒரு நாட் என்பது 1.1508 கி.மீ.). பயண வேகம் 18 நாட்ஸ். 7,500 மைல்கள் வரை நிற்காமல் செல்லும் திறன்கொண்டது.
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, விராட்
- இதற்கு முன்னதாக 2013ஆம் ஆண்டு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டு, நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. விக்ரமாதித்யா இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பலாகும். 20 தளங்கள் கொண்ட இக்கப்பலின் நீளம் 284 மீ. 1,600 ராணுவ வீரர்கள் பயணம் செய்யலாம். எடை 44 ஆயிரத்து 500 டன். இந்தக் கப்பலில் கடற்படையின் போர்க் கப்பல்கள், பல்வகை விமானங்களைத் தரையிறக்கலாம்.
- விராட் விமானம் தாங்கி கப்பல் பிரிட்டன் கடற்படையிலிருந்து வாங்கப்பட்டு, 1987ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. கப்பலின் எடை 23 ஆயிரத்து 900 டன். நீளம் 226.5 மீ. அகலம் 49 மீ. இதில், 18 விமானங்களை தரையிறக்கலாம். இந்தக் கப்பல் கடந்தாண்டு இந்தியக் கப்பற்படையிலிருந்து திரும்பப் பெறப்பட்டது.
தீபகற்ப இந்தியாவிற்கு மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை