கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தைவான் நாட்டின் விஸ்ட்ரான் (Wistron) கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆப்பிள் ஐபோன், லெனோவா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பல்வேறு சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்நிறுவனம் பல மாதங்களாக ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை (டிச.12) இரவு தொழிற்சாலையை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த தொழிற்சாலை இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி தேசப்படுத்தினர்.
இந்நிலையில், இத்தாக்குதல் குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்ட்ரான் நிறுவனம் சார்பில் வேமகல் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், "அலுவலக உபகரணங்கள், மொபைல் போன்கள், உற்பத்தி இயந்திரங்கள் என ரூ.412.5 கோடி மதிப்பிலான உபகரணங்கள் இந்த வன்முறையில் தேசமடைந்துள்ளன.