அமெரிக்காவில் ஓரிகன் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவு ஈட்டி எறிதலில் 88.13 மீட்டர் தொலைவிற்கு வீசி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார். உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா ஆடவர் பிரிவில் பெறும் முதல் பதக்கமும், முதல் வெள்ளி பதக்கமும் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ட்விட்டரில் அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, "நமது புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரால் ஒரு பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா. உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்றது, இந்திய விளையாட்டுக்கு இது ஒரு சிறப்பு தருணம். நீரஜின் வரவிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருந்தார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவிற்கான வரலாற்று வெள்ளிப் பதக்கம் இதுவாகும். ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வாழ்த்துகள் நீரஜ் சோப்ரா. உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு கொண்டாடுவதற்கு இந்தியாவுக்கு இன்னொரு தருணத்தை கொடுத்துள்ளீர்கள்" எனத் தெரிவித்தார்.