டெல்லி: சருமப் பிரச்னைகளுக்குப் பல்வேறு தீர்வுகள் தற்போது கிடைக்கின்றன. கிரீம், சீரம், தைலம், மாய்ஸ்சரைசர், டோனர் உள்ளிட்டப் பல்வேறு அழகு சாதனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் சிலர் ஒரு கிரீமை வாங்கி, பல்வேறு வகையில் பயன்படுத்துவார்கள். சான்றாக, முகத்துக்கு வாங்கிய கிரீமை கண்களுக்கும் பயன்படுத்துவது போன்றவற்றை செய்கிறார்கள்.
உண்மையில் நாம் ஒரு சீரமையோ, கிரீமையோ வாங்கியாக வேண்டுமா? முகத்துக்குப் பயன்படுத்தப்படும் சீரமை கண்களுக்கு பயன்படுத்தலாமா? உள்ளிட்ட நமது கேள்விகளுக்கு, மும்பையில் உள்ள முன்னணி தோல் மருத்துவமனையான ஸ்கின்வொர்க்ஸின் நிறுவனர் டாக்டர் ப்ரீத்தி ஷெனாய் பதிலளித்தார். அவற்றை இப்போது பார்க்கலாம்...
ஃபேஸ் சீரம் என்பது என்ன?
ஃபேஸ் சீரம், முகத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. சீரம் பொதுவாக அடர்த்தி குறைவாக தண்ணீர் போலவே இருப்பதால், அவை சருமத்தில் ஊடுருவிச்செயல்படும். சீரத்தில் ஸ்கின் லைட்டனிங் ஏஜென்ட்ஸ், எக்ஸ்ஃபோலியேட்டிங் ஆசிட், விட்டமின்ஸ் மற்றும் பல உட்பொருட்கள் உள்ளன. இதனால், முகத்திற்குப் பயன்படுத்தப்படும் சாதாரண கிரீம்களை விட, சீரம் நன்றாக செயல்படும்.
ஃபேஸ் சீரமை கண்களுக்குப் பயன்படுத்தலாமா?
முகத்தில் உள்ள பிற இடங்களைவிட கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதி மிகவும் மென்மையானது. அதனால், கருவளையம், கரும்புள்ளி உள்ளிட்ட பல ஏஜிங் ஃபேக்டர்கள்(Aging Factors) கண்ணைச்சுற்றி அதிகம் தென்படும். அப்பகுதியை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது அவசியம். ஒரு சில ஃபேஸ் சீரம்கள், கண் பகுதிகளில் கடுமையாக இருக்கலாம்.