தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே வாரம்.. ஓஹோனு போன அமேசான்.. பிளிப்கார்ட்! எவ்வளவு கல்லா கட்டி இருக்காங்க தெரியுமா? - Amazon Indian Festive sales

ஆன்லைன் தளங்களில் அறிவிக்கப்பட்ட திருவிழாக் கால விற்பனையில் கடந்த ஆண்டை காட்டிலும் ஐபோன்களின் விற்பனை 25 சதவீதம் வரை அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

phone
phone

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 7:10 PM IST

டெல்லி :திருவிழாக் கால அதிரடி ஆபர் விற்பனையின் எதிரொலியாக கடந்த ஒரு வாரத்தில் மற்றும் 15 லட்சன் ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு இணையதள விற்பனை நிறுவனங்கள் கடந்த வாரம் திருவிழாக் கால சிறப்பு சலூகைகளுடன் கூடிய விற்பனையை அறிவித்தன. பல்வேறு தரப்பினரும் இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலம் ஐபோன், சாதாரண மொபைல் போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்தனர்.

இந்நிலையில் இந்த திருவிழாக் கால விற்பனையில் மட்டும் இந்தியாவிலேயே முதல்முறையாக 15 லட்சம் ஐபோன்கள் ஆன்லைன் மூலம் விற்பனையாகி உள்ளதாக ஆச்சரியத்தக்க தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் 8ஆம் தேதி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 15 லட்சம் ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு திருவிழா கால விற்பனையை காட்டிலும் இந்த ஆண்டு 25 சதவீதம் ஐபோன் விற்பனை அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் ஆப்பிள் ஐபோன்களுக்கு சமமாக சாம்சங், ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் செல்போன் மாடல்களுக்கும் அதிக கிராக்கி நிலவியதாக சொல்லப்படுகிறது.

5ஜி தொழில்நுட்பத்துடன் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் போன்களில் 80 சதவீதம் விற்பனை அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததாக தகவல் கூறப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் அதிகபட்சமாக ஐபோன் 14 மற்றும் கேலக்சி S21 FE, போன்ற மாடல்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், அமேசானில் ஐபோன் 13 கேலக்சி S23 FE போன்கள் 200 சதவீதம் வளர்ச்சி கண்டு அதிகளவில் விற்பனையானதாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் ஐபோனின் 14, 13 மற்றும் 12 பதிப்புகளுக்கு அதிக டிமான்ட் இருந்ததாக கூறப்படுகிறது. 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள் விற்பனை அதிகளவில் காணப்பட்டதாகவும், ரியல் மீ நார்சோ 60x 5G, கேலக்சி M14 5G, M34 5G உள்ளிட்ட மாடல்கள் அமேசானில் அதிகளவில் விற்பனையானதாக கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :Gaganyaan: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் முதல்படி! சாதிக்குமா இஸ்ரோ?

ABOUT THE AUTHOR

...view details