டெல்லி: 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
"பாஜகவின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம்" - ராகுல்காந்தி! - வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் காப்பாற்றும் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் காப்பாற்றும் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "குஜராத் மக்களுக்கு, 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர், இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள், 3 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து காங்கிரஸ் உங்களை காப்பாற்றும், மாநிலத்தில் மாற்றத்தின் திருவிழா கொண்டாடப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் தொடர இருக்கும் பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் உரை