தமிழ்நாடு

tamil nadu

எதிர்பாராத தோல்வி, ஆய்வு செய்வோம் - கேரள காங்கிரஸ் அறிக்கை

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பாத தோல்வி குறித்து ஆய்வு செய்வோம் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

By

Published : May 2, 2021, 6:10 PM IST

Published : May 2, 2021, 6:10 PM IST

ETV Bharat / bharat

எதிர்பாராத தோல்வி, ஆய்வு செய்வோம் - கேரள காங்கிரஸ் அறிக்கை

Congress
Congress

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று (மே 2) வெளியாகியுள்ளன. இதில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, மீண்டும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி அமைவுள்ளது.

இதையடுத்து, அங்கு காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா தேர்தல் தோல்வி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நாங்கள் எதிர்பாராத முடிவு கிடைத்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து ஆய்வுசெய்ய வேண்டும். முதலமைச்சர் பினராயி விஜயன் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தேர்தல் வெற்றியால் அவை நீங்கிவிடாது.

உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர பினராயிக்குத் தொடர்ந்து அழுத்தம் தருவோம்" எனக் கூறியுள்ளார்.

கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் மாறி மாறி ஆட்சி அமைத்துவருவதே வழக்கமாக இருந்துவந்த சூழலில், முதலமைச்சர் பினராயி விஜயன் இடதுசாரிகளுக்குத் தொடர்ந்து இரண்டாவது வெற்றியைத் தேடித்தந்து வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:Election Results Live Updates: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details