குருஷேத்திரா:பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றியதையடுத்து ஆம்ஆத்மி இப்போது ஹரியானா மாநிலத்தின் மீது தனது கனவத்தை திருப்பியுள்ளது. ஹரியானாவில் 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் ஆம்ஆத்மியின் அரசியல் அடித்தளத்தை அமைக்கும் பணியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன்படி, இன்று முதல்முதலாக ஹரியானாவில் மாபெரும் பேரணி ஒன்றை ஆம்ஆத்மி நடத்தியுள்ளது.
குருக்ஷேத்திராவில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். பேரணியில் பேசிய அவர், "ஹரியானாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆம்ஆத்மிக்கு ஆதரவு தர வேண்டும். நாங்கள் டெல்லியிலும், பஞ்சாபிலும் ஊழலை முடிவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.