மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, டெல்லி முழுக்க கடந்த 15 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மத்திய அரசு முன்வைத்த திருத்தங்களை ஏற்க விவசாய சங்கங்கள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்று பாரதிய கிஸான் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "மத்திய அரசு முன்மொழிந்த திட்டத்தில் இந்த சட்டங்களை திரும்பப் பெறுவது பற்றி குறிப்பிடப்படவில்லை.
அவர்கள் (மத்திய அரசு) சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் இந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நாங்கள் நோக்கம். எங்களுக்கு சட்ட திருத்தங்கள் தேவையில்லை. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்.