கொச்சி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியதன் எதிரொலியாக, கடந்த 23ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதன்பின் நேற்று, அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், கேரளாவில் நடந்த கடையடைப்பின்போது அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு கோரி, கேரள போக்குவரத்துக் கழகம் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "கடந்த 23ஆம் தேதி நடந்த கடையடைப்பு போராட்டத்தின்போது, 58 பேருந்துகளின் இருக்கைகள் சேதமடைந்தன. ஒரு பயணி மற்றும் 10 ஊழியர்கள் காயமடைந்தனர். கேரள போக்குவரத்துக் கழகம், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த போராட்டத்தால் 5 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.