மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் விவசாயிகள் சக்கா ஜாம் (chakka jam) எனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்களை மறித்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 விவசாயிகள் அமைப்பைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில், கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிற மாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள், அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரி, உரங்கள் ஆகியவற்றை ஏற்றிவந்த சரக்கு ரயில்கள் மாநிலத்துக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் மின்தட்டுப்பாடு உள்ளிட்ட பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.