விக்கிப்பீடியாவில் இந்தாண்டு தேடப்பட்ட டாப்-25 என்ன தெரியுமா? - wikimedia list in top25 searches in wikipedia
Wikipedia 2023 top search: உலகளவில் இணையத்தள தேடலில் முதன்மையாக இருக்கக்கூடிய விக்கிப்பீடியா தேடல்களின் இந்தாண்டுக்கான டாப்-25 பட்டியலை தனியார் நிறுவனமான விக்கிமீடியா வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது இணையதளம். நாள் ஒன்றுக்கு எண்ணில் அடங்கா கணக்குகளில் இருந்து எண்ணற்றவைகள் தேடப்பட்டு வருகின்றன. பள்ளிப்பாடங்களில் இருந்து விண்வெளி வரை இணையதளத்தின் செயல்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில் தனியார் நிறுவனமான விக்கிமீடியா கடந்த ஆண்டிற்கான இணையதள தேடல்களின் புள்ளி விவரங்கள் குறித்து கடந்த 5ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியல் கடந்த நவ.28 ஆம் தேதி வரையிலான தேடல்களை பதிவுசெய்து விவரங்களை வெளியிட்டுள்ளது. அடுத்தாண்டிற்கான தேடல்கள் பட்டியலை வரையறுக்க வருமாண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதியில் இருந்து விவரங்கள் பதிவு செய்யப்படும் என தனியார் நிறுவனமான விக்கிமீடியா தெரிவித்துள்ளது.
இந்த விவரங்களின்படி, உலகிலேயெ 2023ஆம் ஆண்டிற்கான முதல் அதிகளவு இணையத்தள தேடல் பட்டியலில், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவியாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ChatGPT முதலிடத்தைப் பிடித்துள்ளது. ChatGPT-யின் செயல்பாடுகள் பல்வேறு அச்சுறுதல்களை கொண்டிருந்தாலும் அதன் அறிமுகம் முதல் இன்றுவரை மக்கள் மத்தியில் தொடர் வளர்ச்சியிலே இருந்து வருகிறது.
இதன் தொடர்சியாக இரண்டாம் இணையதள தேடலாக வருடாந்திர இறப்பு விகிதம் குறித்த விவரங்கள் தேடப்பட்டுள்ளது. பிரபலங்கள் இறப்பின்போது அவர்களின் விவரங்கள் குறித்து பரவலாக அவர்களின் விவரங்கள் குறித்து தேடப்படுகின்றன. குறிப்பாக இந்த வரிசையில், இந்தாண்டு உயிரிழந்த பிரபல பாடலாசிரியர் மற்றும் பாடகரான லிசா மேரி பிரெஸ்லியும், F.R.I.E.N.D.S என்ற சிறப்பு தொடர் மூலம் உலகளவில் பிரபிலமடைந்த நடிகரான மத்தேயு பெர்ரி ஆகிய இருவரின் இறப்பு குறித்த அதிகளவு தேடல்கள் பதிவாகியுள்ளது.
இந்தாண்டிற்கான இறப்பு விவரங்களையும் முன்னதாக வெளியிடப்பட்ட இறப்பு குறித்தப் பட்டியலையும் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டு நான்காம் இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 1 ஆம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது ChatGPT இதனை பின்னுக்கு தள்ளியுள்ளது. மூன்றாவதாக, அனைவராலும் பெருமளவில் எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த 2023 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த தேடல்கள் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக 2015 ஆம் ஆண்டு முதல் வரையறுக்கப்பட்டு வரும் இந்தப் பட்டியலில், முதல்முறையாக கிரிக்கெட் விளையாட்டுத் தொடரான ஐபிஎல் 4ஆம் இடத்தையும், மற்ற 3 கிரிக்கெட் தொடர்கள் டாப் 25-யில் இடம்பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்றைய காலக்கட்டங்களில் பலர் நேரடியான புத்தக வாசிப்பை மறந்து, ஆன்லைன் வாசகப் பழக்கத்திற்கு மாறிய சூழலில், டெய்லர் ஸ்விஃப்ட்-ன் ஓபன்ஹெய்மர் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
நாடளவில் ஆங்கிலத்தை ஆதாரமாகக்கொண்டு விக்கிப்பிடியாவில் அதிகளவில் இணையதள தேடலைக்கொண்ட நாடு என்று பார்க்கையில், அமெரிக்கா 33.2 பில்லியன் தேடல்களைக்கொண்டு முதலிடத்திலும், 9 பில்லியன் தேடல்களைக்கொண்டு பிரிட்டன் இரண்டாவது இடத்திலும், 8.48 பில்லியன் தேடல்களைக்கொண்டு இந்தியா மூன்றாவது இடத்திலும், 3.95 பில்லியன் தேடல்களைக்கொண்டு கனடா நான்காவது இடத்திலும், 2.56 பில்லியன் தேடல்களைக்கொண்டு ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்தை வகிப்பதாக விக்கிமீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.