தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மார்க்கெட்டுக்கு செல்ல தடுத்த கணவன் - செங்கல்லால் அடித்துக்கொன்ற மனைவி - ஜார்கண்ட்

மார்க்கெட்டுக்கு செல்ல தடுத்த கணவனை செங்கல்லால், மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி
மனைவி

By

Published : Dec 19, 2022, 10:09 PM IST

குந்தி:ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டம் தோர்பா பகுதியைச்சேர்ந்தவர், அர்ஜூன் சிங். மனைவி கலாவதியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று மார்க்கெட்டுக்குச் செல்ல கலாவதி புறப்பட்ட நிலையில், அர்ஜூன் தடுத்ததாக கூறப்படுகிறது

இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் கைகலப்பில் முடிந்தது. ஆத்திரத்தில் கீழே கிடந்த செங்கல்லை எடுத்த கலாவதி, அதை அர்ஜூனின் தலையில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. கீழே சரிந்து விழுந்த அர்ஜூன் சிங் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

கோபம் தாங்காமல் அர்ஜூனின் தலை மற்றும் கால் உள்ளிட்ட உடல் பகுதிகளில் கலாவதி, தொடர்ந்து செங்கல்லால் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தை தடுக்க வந்த அக்கம்பக்கத்தினரையும் கலாவதி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரில் விரைந்து வந்த போலீசார் அர்ஜூனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து கலாவதியை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியாவின் டாப் 10 மொழிகள் பட்டியலில் பஞ்சாபிக்கு முக்கிய இடம்!

ABOUT THE AUTHOR

...view details