பெங்களூரு (கர்நாடகா):கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரின் காக்ஸ் டவுனில் வசித்து வந்தவர், தீபக் ஜோசப் கிளாவியர். இவருக்கு தீபலட்சுமி என்ற மனைவியும் நான்கு மாத குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தீபக் சில தினங்களாக மதுபோதைக்கு அடிமையாகி, தினமும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அருகிலுள்ள மறுவாழ்வு மைய ஊழியர்களின் உதவியுடன் தீபக்கை அவரது மனைவி அம்மையத்திற்கு அனுப்பியுள்ளார். மூன்று மாதங்கள் மறுவாழ்வு மையத்தில் இருந்த தீபக், கை மற்றும் கால்களில் தாக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த தீபக்கின் தாய், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.