ஒடிசா :திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை, ஆண் நண்பருக்கே கணவர் திருமணம் செய்து கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அரங்கேறி உள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதவ பிரதான். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜில்லி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ஜில்லிக்கு தனது தூரத்து உறவினரான பரமேஸ்வர பிரதான் என்பவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதன் பிறகு இருவரும் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி எதுவுமே அரியாத கணவர் மாதவ பிரதான் தனது மனைவி காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இதனையடுத்து புகாரின் பேரில் போலீசார் அவர்களைத் தேடி வந்தனர். இதனிடையே இருவரையும் மீட்ட போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது இச்சம்பவம் குறித்து விசாரித்த போது தாங்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வருவதாகவும், பரமேஷ்வர் பிரதானுடன் தான் வாழ விரும்புவதாகவும் ஜில்லி தெரிவித்து உள்ளார்.