தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தவர் கைது! - திரிபுரா பாலியல் துன்புறுத்தல்

அகர்தலா: திரிபுராவில் 50 வயதான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடூரமாக கொன்ற நபரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Widow raped
திரிபுரா

By

Published : Apr 1, 2021, 3:06 PM IST

திரிபுராவில் செபாஹிஜாலா மாவட்டத்தில் 50 வயதான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர் துலால் தாஸ் எனத் தெரியவந்துள்ளது. தலைமறைவாகவுள்ள அவரை, தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், உதய்பூர் பகுதியில் துலால் தாஸ் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குற்றவாளி பதுங்கியிருந்த வீட்டை காவலர்கள் சுற்றி வளைத்துள்ளனர். போலீஸ் வந்திருப்பதை அறிந்த துலால் தாஸ், பயத்தில் விஷத்தை அருந்தியுள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனையில் காவல் துறையினர் அனுமதித்துள்ளனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணுடன், துலால் தாஸ் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்ததாகவும், தாஸின் மனைவி இப்பிரச்னையில்தான் பிரிந்து சென்றதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:மதுபோதையில் மனைவியைக் கொலைசெய்த ரவுடி கைது!

ABOUT THE AUTHOR

...view details