தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கும்பமேளா ஏன் இன்னும் நிறுத்தப்படவில்லை? - கரோனா தொற்று

உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போதைய கரோனா தொற்றின் நிலையைப் பார்க்கும்போது, எந்த நேரத்திலும் கும்பமேளாவைத் தொடர்வது குறித்து மாநில அரசு ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கும்பமேளா ஏன் இன்னும் நிறுத்தப்படவில்லை
கும்பமேளா ஏன் இன்னும் நிறுத்தப்படவில்லை

By

Published : Apr 17, 2021, 12:36 AM IST

Updated : Apr 17, 2021, 3:15 AM IST

ஹரித்வார்: தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பமேளா 83 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் முன்னதாகவே முடிக்கப்படலாம். இருப்பினும், கும்பத் திருவிழா ஏப்ரல் 30 வரை தொடரும் என்று உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்றுநோயால் எழும் ஆபத்தான சூழ்நிலையைப் பார்க்கும்போது, ​​கும்பமேளா முன்பே முடிவடையும் என்று அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது நடந்தால், ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் பிறகு நடைபெறும் கும்பமேளாவின் வரலாற்றில் இது முதல்முறையாக நடக்கும். கும்பமேளாவின் காலம் ஏற்கனவே ஐந்து மாதங்களிலிருந்து ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது, இதுவும் கும்பமேளாவின் வரலாற்றில் முதல் முறையாகவும் நிகழ்ந்துள்ளது.

கும்பமேளாவை முன்னதாகவே முடிக்கலாமா?

மாநிலத்தில் தற்போதைய கரோனா வைரஸின் நிலையைப் பார்க்கும்போது, ​​எந்த நேரத்திலும் கும்பமேளாவைத் தொடர்வது குறித்து மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. கரோனா தொற்று உத்தரகண்டில் மிக வேகமாக பரவுகிறது. கும்பமேளா காரணமாக கரோனா நிலைமை மோசமடைவதற்கான வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது. கடந்த மூன்று நாட்களில், உத்தரகண்ட் மாநிலத்தில் தினமும் 1900க்கும் மேற்பட்டோர் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில், உத்தரகண்ட் மாநிலத்தில் 8765 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட 50 பேர் உயிர் இழந்துள்ளனர்.

உத்தராகண்டில் கடந்த 5 நாட்களில் கரோனா நிலவரம்

ஏப்ரல் 11: பாதிப்பு - 1333, இறப்புகள் - 8

ஏப்ரல் 12: பாதிப்பு - 1334, இறப்புகள் - 7

ஏப்ரல் 13: பாதிப்பு - 1925, இறப்புகள் - 13

ஏப்ரல் 14: பாதிப்பு - 1953, இறப்புகள் - 13

ஏப்ரல் 15: பாதிப்பு - 2220, இறப்புகள் - 9


சந்நியாசிகளிடையே கரோனா வேகமாக பரவுகிறது

கும்ப நகரமான ஹரித்வாரை பொருத்தமட்டில், கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 2526 கரோனா வைரஸ்கள் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சன்யாசிகளின் வழக்கமான குளியல் முடிந்தபின், கரோனா வைரஸ் பாதிப்புகளில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. நிரஞ்சனி அகாராவின் செயலாளர் மஹந்த் ரவீந்திர பூரி உட்பட அகாராவின் 17 சன்யாசிகள், விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதே பகுதியுடன் தொடர்புடைய அகாரா பரிஷத்தின் தலைவரான மஹந்த் நரேந்திர கிரி, ஏப்ரல் 11 முதல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களுடன், வெவ்வேறு அகராஸுடன் தொடர்புடைய பல சன்யாசிகளும் கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 60க்கும் மேற்பட்ட சன்யாசிகள் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. பல சன்யாசிகள் மற்றும் பக்தர்களும் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதை ஹரித்வார் மருத்துவ அதிகாரி அர்ஜுன் சிங் செங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பல சன்யாசிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஏப்ரல் 16: நிரஞ்சனி அகாராவின் செயலாளர் ரவீந்திர பூரி உட்பட 17 சன்யாசிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.

ஏப்ரல் 15: 28,525 பரிசோதனை முடிவுகளில் ஒன்பது சன்யாசிகளுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த சன்யாசிகளில் ஜூனா அகாராவின் நான்கு பேர், அஹ்வான் அகாராவின் இரண்டு மற்றும் நிரஞ்சனி அகாராவின் மூன்று ஆகியவை அடங்கும்.

ஏப்ரல் 14: 31,308 பேர் பரிசோதிக்கப்பட்டனர். ஜூனா அகாராவின் நான்கு சன்யாசிகள், அக்னி, மகாணிர்வானி, திகம்பர் மற்றும் அனி அகராஸ் ஆகியவற்றில் தலா ஒருவர், ஆனந்த் அகாராவில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், பைராகி பிரிவின் ஆசிரமத்தில் சந்தித்த மூன்று சன்யாசிகளில், மகாமண்டலேஸ்வர் கபில் தேவ் இறந்தார்.

ஏப்ரல் 13: மொத்தத்தில், 29,825 பரிசோதனைகள் நடத்தப்பட்டன, அதில் ஜுனா அகாராவின் ஐந்து சன்யாசிகள் மற்றும் நிரஞ்சனி அகாராவின் மூன்று சன்யாசிகளுக்கு தொற்று உறுதியானது.

ஏப்ரல் 12: 26,694 பரிசோதனைகள் நடத்தப்பட்டன, இதில் ஆறு சன்யாசிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

ஏப்ரல் 11: 23,394 பரிசோதனைகள் நடத்தப்பட்டன, இதில் ஜூனா அகாராவின் இரண்டு சன்யாசிகளுக்கு கரோனா பாதிப்பும், நிரஞ்சனி அகாராவின் ஒரு சன்யாசிக்கு கரோனா பாதிப்பும் கண்டறியப்பட்டது.

ஏப்ரல் 3: கிருஷ்ணா தாம்-ன் ஏழு சன்யாசிகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

மகாமண்டலேஷ்வரின் மரணத்திற்குப் பிறகு சன்யாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

டெஹ்ராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அகில இந்திய ஸ்ரீ பஞ்ச் நிர்வாணி அகாராவின் 65 வயதான மகாமண்டலேஸ்வர் கபில் தேவ் தாஸ் இறந்த பின்னர் ஹரித்வாரின் சன்யாசிகள் சமூகம் பயம் மற்றும் அதிர்ச்சியின் பிடியில் உள்ளது என்று சொல்ல தேவையில்லை. மகாமண்டலேஸ்வர் தாஸ் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. ஸ்ரீ பஞ்ச் நிர்வாணி அகாராவின் மூத்த மகாமண்டலேஸ்வர் கபில் தேவ் தாஸ் இறந்தவுடன், பைராகி சந்த் சமாஜ் உட்பட ஒட்டுமொத்த சாந்த் சமுதாயமும் விரக்தியில் உள்ளது. இந்த சம்பவம் நடந்த உடனேயே, பஞ்சாயத்து அகாராவின் ஸ்ரீ நிரஞ்சனியும், ஆனந்த் அகாராவில் உள்ள அவரது சகாக்களும் ஏப்ரல் 17 ஆம் தேதி கும்பமேளாவை நிறைவு செய்வதாக அறிவித்தனர். நிரஞ்சனி அகாராவின் துறவிகள் மற்றும் சன்யாசிகளுக்கான தற்காலிக தங்குமிடங்கள் ஏப்ரல் 17 அன்று அகற்றப்படும்.

நிரஞ்சன் அகாராவின் மஹமண்டலேஷ்வர் கைலாஷானந்த் கிரி கூறுகையில்,கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் மிக முக்கியமானவை. கும்பமேளா வழக்கம் போல் பிரமாதமாக நடந்தது. கும்பமேளாவின் கம்பீரத்திற்கு எந்த சமரசமும் இல்லை. அது அப்படியே உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மகாமண்டலேஷ்வர் மற்றும் நிரஞ்சனி மற்றும் ஆனந்த் அகாரா ஆகியோரின் மஹந்த்ஸ் ஏப்ரல் 17 ஆம் தேதி தங்கள் முகாம்களை அகற்ற முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 17 ஆம் தேதிக்குப் பிறகு அவர்களின் அகராஸில் பெரிய நிகழ்வு எதுவும் இருக்காது. வெளியில் இருந்து வந்த சன்யாசிகள் திரும்பிச் செல்வார்கள். ஹரித்வாரின் சன்யாசிகளாக இருப்பவர்கள் மீண்டும் தங்கள் அகராஸுக்கு வருவார்கள். கரோனா தொற்றுநோயால் நிலைமை இனி சாதகமாக இருக்காது என்று அவர்கள் கூறினர். அதனால்தான் இந்த முடிவு அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

மஹந்த் ரவீந்திரபுரி, நிரஞ்சனி அகார செயலாளர் கூறும்போது,கரோனா வைரஸின் அச்சுறுத்தல் ஹரித்வாரில் எந்த கால அவகாசமும் காட்டாததால், கும்பத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவு நிரஞ்சனி அகாராவால் எடுக்கப்பட்டுள்ளது. தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, இந்த அகாராவிலிருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி 15 முதல் 20 துறவிகள் மட்டுமே வழக்கமான புனித குளியல் செய்வார்கள் என்று முடிவு செய்துள்ளோம். அனைத்து சன்யாசிகள் மற்றும் பக்தர்கள் இப்போது ஹரித்வாரை காலி செய்து அவரவர் இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனைவரின் பாதுகாப்பிற்கும் இது அவசியம்

கும்பமேளாவை நிறைவு செய்வதில் அகராஸில் உள்ள கருத்து வேறுபாடுகள்

மறுபுறம், நிரஞ்சனி அகாரா சார்பாக கும்பமேளாவை நிறுத்துவதாக அறிவித்ததில் பைராகி சன்யாசிகள் மகிழ்ச்சியடையவில்லை. நிரஞ்சனி மற்றும் ஆனந்த் அகராஸ் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிர்வாணி மற்றும் திகம்பர் அகாரஸ் கோருகின்றனர். கும்பமேளா பற்றி முடிவெடுக்க மாநில முதல்வருக்கு அல்லது மேளா நிர்வாகத்திற்கு மட்டுமே உரிமை உண்டு என்று அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அறிவிப்பை வெளியிடும் சன்யாசிகள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நிர்வாணி மற்றும் திகம்பர் அகாரஸ் அகாரா கவுன்சிலுடன் இருக்காது. அவர்களின் கும்பமேளா தொடர்ந்து நடக்கும். ஏப்ரல் 27ஆம் தேதி அனைத்து பைராகி சன்யாசிகளும் புனித குளியலில் பங்கேற்பார்கள்.

அதே சமயம், பரா உதாசின் அகாரா கூட இந்த வழியில் கும்பத்தை நடத்துவதற்கு ஆதரவாக இல்லை. அவர்கள் அனைத்து அகாரர்களிடமும் ஒருமித்த கருத்தை விரும்புகிறார்கள். யாரையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட அத்தகைய முடிவு செல்லுபடியாகாது என்று அகாராவின் மகாந்த் மகேஸ்வர் தாஸ் கூறினார்

கும்பமேளா முடிவு குறித்த அறிவிப்பை ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்வரூபநந்த் சரஸ்வதியும் எதிர்த்தார். ஈடிவி பாரத் உடனான உரையாடலில், ஸ்வரூபானந்த் சரஸ்வதியின் சீடரான அவிமுக்தேஸ்வரானந்த் கூறும்போது, கும்பமேளா எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல, இது அனைவருக்குமானது. தங்கள் முடிவை மற்றவர் மேல் திணிக்க யாருக்கும் உரிமை இல்லை. கும்பத்திற்கு ஒரு காலக்கெடு உள்ளது, அது பூர்த்தி செய்யப்பட வேண்டும். கும்ப மேளா கிரக விண்மீனின் அடிப்படையில் தொடங்கி முடிகிறது. கும்பமேளா முடியும் வரை ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்வரூபநந்த் சரஸ்வதி மகாராஜ் ஹரித்வாரில் இருப்பார். கரோனாவின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அவர் தனது முக்கிய திட்டங்களை மட்டுமே ரத்து செய்துள்ளார். மற்ற திட்டங்கள் அவரது யாக்யா முகாமில் தொடரும் என்று கூறினார்.

அதே நேரத்தில், ஸ்ரீ நிரஞ்சனி மற்றும் ஆனந்த் அகராஸ் ஆகியோரின் முடிவை பற்றி, ​​அவிமுக்தேஸ்வரானந்த் கூறுகையில், கரோனா வைரஸ் நாடு முழுவதும் உள்ளது. சன்யாசிகள் மற்றும் முனிவர்கள் ஹரித்வாரை விட்டு வெளியேறினால், அவர்கள் வேறு இடங்களில் கரோனா வைரஸைப் பரப்ப மாட்டார்களா? கரோனா தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக ஒரே இடத்தில் தங்குவதன் மூலம் அரசாங்கம் வெளியிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது நல்லது என்று கூறினார்

அதே நேரத்தில், கும்பமேளாவை நிறுத்துவது தொடர்பாக ஜூனா அகாரா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜூனா அகாராவின் முனிவர்களும் சன்யாசிகளும் தங்கள் கரோனா அறிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள், அதன்பிறகுதான் அவர்கள் கும்பமேளாவை நிறுத்தலாமா அல்லது தொடரலாமா என்று தீர்மானிக்க ஒரு கூட்டம் கூட்டப்படும்.

ஹரித்வாரில் கடந்த 5 நாட்களில் கரோனா நிலவரம்

ஏப்ரல் 11: பாதிப்பு - 386, இறப்பு - 0

ஏப்ரல் 12: பாதிப்பு - 408, இறப்புகள் - 2

ஏப்ரல் 13: பாதிப்பு: 594, இறப்பு - 1

ஏப்ரல் 14: பாதிப்பு: 525, இறப்பு - 2

ஏப்ரல் 15: பாதிப்பு: 613, இறப்பு - 1

விழாவை ரத்து செய்ய ஆரம்பத்திலேயே வேண்டுகோள் விடப்பட்டது

ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்வை ரத்து செய்யுமாறு சுகாதார நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர், ஆனால் ஒவ்வொரு கோவிட் -19 வழிகாட்டுதலும் பின்பற்றப்படும் என்றும் மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் கும்பமேளா ஐ.ஜி. சஞ்சய் குன்ஜால் கூறுகையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, விதிகளை பின்பற்றுமாறு நாங்கள் தொடர்ந்து மக்களை வலியுறுத்தினோம். ஆனால் அது மிகவும் நெரிசலான இடத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத மக்களை கண்டிப்பது என்பது சாத்தியமில்லை. காவல்துறையினர் மக்களை சமூக இடைவெளியின் விதிகளைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்தினால் அல்லது அதைச் செயல்படுத்த முயற்சித்தால், மக்கள் நெரிசல் போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும்.

கும்பமேளாவுக்கு முன்னர், கோவிட்-19 பாதிப்பு இல்லை என்ற சான்று இருப்பவர்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் கூறியிருந்தது. கும்பமேளாவிற்கு வந்த பிறகு கரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட வேண்டும், ஆனால் அப்போதும் கூட பல பிரபல சன்யாசிகள் மற்றும் துறவிகள் உட்பட பலர் இங்கு வந்துள்ளனர். இந்த கரோனா தொற்று பக்தர்கள் மத்தியில் வேகமாக பரவக்கூடும் என்று கூறப்பட்டது. இந்த வைரஸ் இங்கிருந்து திரும்பும் பக்தர்களுடன் அவர்களது கிராமங்களையும் நகரங்களையும் அடைகிறது.

நீர் மூலம் கரோனா விரைவாக பரவும் அபாயம்

விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, கரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து வறண்ட மேற்பரப்பை விட நீர் மற்றும் ஈரப்பதம் மூலம் அதிகமாக உள்ளது, ஏனெனில் வைரஸ் ஈரமான மேற்பரப்பில் நீண்ட நேரம் உயிருடன் இருக்க முடியும்.

கும்பமேளா கோவிட் -19 அபாயத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நீரிலும் ஈரப்பதத்திலும் மிக தீவிரமாக இருக்கும் வைரஸ், வெற்று மேற்பரப்புகளுக்கு வரும்போது அது வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து உயிர்ப்புடன் இருக்கும். கரோனா வைரஸின் வெப்ப இறப்பு புள்ளி 58 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், ஆனால் குளிராக இருக்கும்போது, ​​அதன் உயிர்வாழும் நேரம் அதிகரிக்கிறது. கங்கை நீர் குளிர்ச்சியாக இருக்கிறது, இங்கு வரும் பலருக்கும் கரோனா தொற்று ஏற்படலாம். கூடுதலாக, அவர்கள் கங்கையில் குளிக்கும்போது துப்புகிறார்கள், இருமுகிறார்கள். இதன் காரணமாக கரோனா நோய்த்தொற்றுகள் மிகவும் எளிதில் அதிகரிக்க வாய்ப்பாகிறது. கொரோனா சுமார் 28 நாட்கள் நீரில் வாழக்கூடியது.

குருகுல் காங்ரி பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை தலைவர் பேராசிரியர் ரமேஷ் சந்திர துபே கூறுகையில், ஹோலி பண்டிகையின் போது மக்கள் ஹோலியை கொண்டாடும் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே தற்போது காணப்படுகின்ற கரோனா வைரஸின் அலை என்றும் மகாகும்பின் தாக்கம் சுமார் 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகுதான் தெரியவரும் என்றும் கூறினார்.

பணியில் உள்ள காவலர்களுக்கும் பாதிப்பு

மகாகும்பில் ஒவ்வொரு பெரிய குளியல் முடிந்தபின், சுமார் 10 ஆயிரம் காவலர்கள் சோதனை செய்யப்பட்டனர், அதில் 33 காவலர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டிஜிபி அசோக் குமாரின் கூற்றுப்படி, இப்போது கும்பமேளா வெறும் சம்பிரதாயமாகவே உள்ளது. ஏப்ரல் 27ஆம் தேதி திட்டமிடப்பட்ட அரச குளியலில் அனைத்து அகாரங்களும் சேர்க்கப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, பணியில் உள்ள 50 விழுக்காடு காவலர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

மேளா ஐ.ஜி. சஞ்சய் குன்ஜால் கூறும்போது,மாநிலத்தை பொறுத்தவரை, ஏப்ரல் 30 வரை கும்பமேளாவிற்கு ஒரு தெளிவான அறிவிப்பு உள்ளது. ஏப்ரல் 30 வரை எங்களிடம் ஏற்பாடுகள் உள்ளன. கும்பமேளா எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது மத்திய அரசால் வேறுபட்ட நிலையான இயக்க நடைமுறைகள் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாங்கள் செயல்படுகிறோம். மேளா தொடர்பாக யாராவது ஏதேனும் முடிவெடுத்தால், அது அவருடைய தனிப்பட்ட முடிவாக இருக்கும். நாங்கள் ஏப்ரல் 30 வரை மேளா பணியில் இருக்கிறோம்.

கும்பமேளா 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா, 11 ஆண்டுகளில் நடைபெற்றது இதுவே முதல் முறை. இந்த கும்பம் 2022ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், கிரக அமைப்புகள் காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நல்ல தற்செயல் நிகழ்வு காணப்பட்டதால் ஏற்பாடு செய்யப்பட்டது. விசேஷம் என்னவென்றால், இதுபோன்ற ஒரு தற்செயல் நிகழ்வு நூற்றாண்டில் முதல் முறையாக நடக்கிறது. பொதுவாக, கும்பம் 12 வருட இடைவெளிக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்படுகிறது, ஆனால் கிரகக் கணக்கீட்டின்படி, இது கும்பத்தில் உள்ள குரு மற்றும் மேஷத்தில் சூரியனின் நுழைவு புனித இணைப்பைக் குறிக்கிறது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஹரித்வார் கும்பின் பாரம்பரியத்தைப் பார்த்தால், 1760, 1885 மற்றும் 1938ஆம் ஆண்டுகளின் கும்பம் 11 ஆண்டுகளில் நடந்தது. 83 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வாய்ப்பு 2021 இல் வந்துள்ளது.

கும்பமேளா ஏன் கொண்டாடப்படுகிறது?

கும்பமேளா கடலை கடைவதுடன் தொடர்புடையது. தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடையும் போது, ​​அதிலிருந்து அமிர்தமும் நஞ்சும் வெளியே வந்தது என்று கூறப்படுகிறது. சிவன் உலகத்தின் நன்மைக்காக நஞ்சை குடித்தார், ஆனால் தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கும் இடையிலான போராட்டம் அமிர்தத்திற்காக தொடங்கியது. அசுரர்கள் தன்னிடமிருந்து அமிர்தத்தை பறிக்கக்கூடாது என்பதற்காக கடலில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு தன்வந்தரி வானத்தில் பறந்தார். இந்த நேரத்தில், பிரயாக், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இடங்களில் அமிர்த துளிகள் பூமியில் விழுந்தன.

அமிர்தத்தின் துளிகள் விழுந்த இந்த நான்கு இடங்களில் கும்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான இந்த மோதல் 12 நாட்கள் நீடித்தது. தேவர்களின் ஒரு நாள் என்பது ஒரு வருடத்திற்கு சமம் என்று நம்பப்படுகிறது. எனவே கும்பமேளா ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறுகிறது.

Last Updated : Apr 17, 2021, 3:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details