டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி டெல்லியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி, தற்போது இந்திய துருப்புகள் மூன்றாம் விரல் எல்லைப் பகுதியில் நிறுத்தப்படுவதாகத் தெரிகிறது.
நான்காம் விரல் எல்லைப் பகுதி இந்தியாவிற்குச் சொந்தமானது. ஆனால், இந்திய துருப்புகள் நான்காம் விரல் பகுதியிலிருந்து மூன்றாம் விரல் பகுதிக்கு நகர்ந்துள்ளன. இதற்கு என்ன காரணம், பிரதமர் மோடி நமது பகுதியை சீனர்களுக்கு விட்டுவிட்டாரா?