தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசுக்கு அளிக்கும் ஆதரவை ஏன் பாஜக திரும்பப்பெறவில்லை? - நாரயணசாமி கேள்வி - Narayanasamy

புதுச்சேரி மாநிலத்தில் பாஜக எம்எல்ஏக்களின் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் செய்துள்ள பாஜக எம்எல்ஏக்கள், அரசுக்கு அளிக்கும் ஆதரவை ஏன் திரும்ப பெறவில்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் ரங்கசாமிக்கான ஆதரவை ஏன் பாஜக எம்எல்ஏக்கள் திரும்ப பெறவில்லை? - நாரயணசாமி கேள்வி
முதலமைச்சர் ரங்கசாமிக்கான ஆதரவை ஏன் பாஜக எம்எல்ஏக்கள் திரும்ப பெறவில்லை? - நாரயணசாமி கேள்வி

By

Published : Sep 22, 2022, 9:19 AM IST

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்துகின்றனர். இதில் தொகுதி வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எனவும், பாஜக எம்எல்ஏக்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் செய்துள்ளனர்.

பாஜக எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப்பட்டால் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை ஏன் திரும்ப பெறவில்லை? தெம்பும், திராணியும் இருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டியதுதானே? பாஜகவினர் சும்மா பூச்சாண்டி காட்டக்கூடாது. இது பாஜகவின் இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது.

புதுச்சேரியில் அலுவலர்களை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மிரட்டுகின்றனர். இதற்கு காரணம் ரவுடிகளும், கொலையாளிகளும் பாஜகவில் சேர்ந்திருப்பதுதான். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அனுமதி பெற்று நடத்திய போராட்டத்தில் திடீரென இந்து முன்னணி தொண்டர்கள் நுழைந்து கல்வீச்சு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், போலீசாரிடம் எப்படி போராட்டத்துக்கு அனுமதியளித்தீர்கள்? என கேட்டு மிரட்டுகிறார். சபாநாயகர் நடுநிலை வகிக்க வேண்டும். அரசியல் செய்ய விரும்பினால், பதவி விலகி அரசியலுக்கு வர வேண்டும். அவர் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

பாஜகவின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கட்சி அலுவலக விழாக்களில் பங்கேற்பது துரதிர்ஷ்டவசமானது. தனது அதிகார எல்லையை மீறி அரசு நிர்வாகத்தில் சபாநாயகர் தலையிடுகிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும். வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது.

காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்ட உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீரை காய்ச்சிக் குடிக்கும்படி அறிவுறுத்துகின்றனர். இதுவரை கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தவில்லை. கவர்னர் நடமாடும் மருத்துவ முகாம் அமைக்க அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கை குழந்தைகளுடன் பெற்றோர் ஆஸ்பத்திரிகளில் நிற்பது வேதனை அளிக்கிறது. சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாய்லாந்து, மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியுறவுத்துறை மந்திரிக்கு நான் கடிதம் அனுப்பியுள்ளேன்” என்றார்.

இதையும் படிங்க:தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்து முன்னணி மோதல்... கல்வீச்சு..!

ABOUT THE AUTHOR

...view details