தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Ink attack on VK Pandian IAS:தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன் மீது கருப்பு பேனா மை வீச்சு! ஒடிசாவில் நடப்பது என்ன? - Who is VK Pandian IAS Explain

Ink attack on VK Pandian IAS:தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் மீது ஒடிசா மக்கள் கருப்பு பேனா மை தெளித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்

தமிழகத்தை சேர்ந்த வி.கே பாண்டியனுக்கு கருப்பு பேனா மை தெளித்து எதிர்ப்பு
தமிழகத்தை சேர்ந்த வி.கே பாண்டியனுக்கு கருப்பு பேனா மை தெளித்து எதிர்ப்பு

By

Published : Aug 19, 2023, 10:38 PM IST

Updated : Aug 20, 2023, 9:53 AM IST

INK Attack on Odissa 5T Secretary VK Pandian IAS

ஒடிசா(புவனேஸ்வர்):ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாய்க்கின் 5டி செயலாளராக பணியாற்றி வருபவர் வி.கே. பாண்டியன். இவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். பூரி மாவட்டத்தில் உள்ள சத்யபாடியில் இயங்கி வரும் யுஜிஎஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (ஆக.19) வருகை தந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் வி.கே பாண்டியன் மீது பேனா மையை தெளித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னதாக. வி.கே பாண்டியனுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தியும், முட்டையும் வீசி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த எதிர்பாராத பேனா மை வீச்சால் அவரது முகம் முற்றிலுமாக கறை ஆனாது. அப்போது பாண்டியனுடம் உடன் இருந்த பூரி மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மா மீதும் பேனா மை தெளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காவல் துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர் பூரி மாவட்டத்தை சேர்ந்த 'சாகு' எனவும் இவர் கானாஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் அறியபடவில்லை எனக் கூறப்படுகிறது. முன்னதாக, 5டி செயலாளர் வி.கே.பாண்டியன் பூரி மாவட்டத்தின் பல பகுதிகளை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. வி.கே.பாண்டியன் “மிஷன் சக்தி” உறுப்பினர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.

VK Pandian

இந்நிலையில் ஒடிசாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சஸ்மித் பத்ரா, வி.கே.பாண்டியனுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது “ஒடிசாவின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அவரைப் பாதுகாத்து வருகின்றனர். கடவுள் அவரைப் பாதுகாக்கிறார். ஒடிசாவின் 4.5 கோடி மக்களும் அவரைப் பாதுகாக்கின்றனர். அவருக்கு ஒடிசாவின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசீர்வாதமும் மற்றும் கடவுளின் பாதுகாப்பும் உள்ளது. அவர்களே அவருடைய பலம்; அவர்களின் வளர்ச்சிக்கு அவர் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்” என்று வி.கே.பாண்டியனுக்கு ஆதரவாக பதிவிட்டு இச்செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தெர்மாகோலில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்.. மகாராஷ்டிராவில் அவலம்!

மேலும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்தத் தலைவரான சௌம்யா ரஞ்சன் பட்நாயக், வி.கே.பாண்டியனுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள அவர், அமைச்சர்களை விட அதிகாரி அதிகாரம் மிக்கவராக திகழ்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று சாடியிருந்தார். வி.கே.பாண்டியனின் சுற்றுப்பயணத்திற்கு சுமார் ரூ.300 கோடி ஹெலிகாப்டர் உள்ளிட்ட செலவீனங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

யார் இந்த வி.கே பாண்டியன்?: வி.கே.பாண்டியன் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2000ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஒடிசா மாநில கேடரில் பணியில் சேர்ந்தார். வழக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் போன்றே மாவட்ட வாரியாக பணியில் இருந்த இவர் 2011ஆம் ஆண்டில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அறிமுகத்தையும், நன்மதிப்பையும் பெற்றார்.

பின்னர், முதலமைச்சரின் தனி செயலாளராகவும், '5 T' எனப்படும் அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்க குழுவின் தலைமைப் பதவியையும் ஏற்று, ஒடிசா அரசில் தவிர்க்க முடியாத ஒரு அளுமையாக திகழ்ந்து வருகிறார். அரசு மட்டுமின்றி அரசியலிலும் பாண்டியனின் ஈடுபாடு தான் ஒடிசாவில் சமீபகாலமாக சில சலசலப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மை தெளிக்கப்பட்டப் பின்னரும், பிஜூ ஜனதா தளத்தின் பெண் தொண்டர்கள் அவரைப் பாசமாக அரவணைத்து மலர்களைத் தூவி, முகத்தில் உள்ள மையை துணிகளால் துடைத்தப்படியே, நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வதைப் போல பத்திரமாக அழைத்துச் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

இதையும் படிங்க:கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் - சென்னையில் மேலும் ஒருவர் கைது!

Last Updated : Aug 20, 2023, 9:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details