ஹைதராபாத் (தெலங்கானா):தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணும் பணியானது டிசம்பர் 03ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் பிஆர்எஸ் கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தற்போது தெலங்கானாவில் ஆட்சி அமைத்துள்ளது. இதன் பதவி ஏற்பு விழா கடந்த 8ம் தேதி நடைபெற்றது. அப்போது பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக சீதாக்கா பெயரை உச்சரிக்கும் போது அரங்கமே மக்கள் முழக்கங்களால் நிரம்பியது. தற்போது இந்த வீடியோ காட்சி தெலங்கானா மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
யார் இந்த சீதாக்கா? 1971ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் முலுகு பகுதியில் பிறந்தார். இவரது பெயர் அனுசுயா தன்சாரி ஆகும். கோயா பழங்குடியின மக்களைச் சேர்ந்தவர். இவர் தனது 8 வகுப்பு படிக்கும் போதிலிருந்து தனது மக்களுக்கான சமூகப் பணியைத் தொடங்கியுள்ளார்.
நக்சலைட் to வழக்கறிஞர்:10ஆம் வகுப்பு படிக்கு போது அனுசுயா தன்சாாி தனது மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் ஆயுதம் ஏந்த வேண்டும் என எண்ணி நக்சலைட்டாகத் தனது பயணத்தைத் தொடங்கினார். அப்போது தான் அவருக்கு சீதாக்கா எனப் பெயரால் கிடைக்கப் பெற்றது. ஆனால் ஆயுதம் ஏந்தி போராடுவது தவறு என அறிந்த சீதாக்கா 1997ஆம் ஆண்டு பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார். மேலும் உடனடியாக சட்டக் கல்லூரியில் இணைந்து தனது படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆனார்.
பலம் அடைய வைத்த தேர்தல் தோல்விகள்:வழக்கறிஞராக மக்களுக்கு உதவுவதை விட அதிகாரம் கையிலிருந்தால் தனது மக்களுக்கான அதிகமான உதவிகளைச் செய்யலாம் என நினைத்து முதன் முறையாக 2004ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்ப்பில் முலுகு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
"சீதாக்கா" முதல் வெற்றி: 2009ஆம் ஆண்டு முலுகு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஆந்திராப் பிரதேசம் இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து 2014ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானாவில் அதே முலுகு தொகுதியில் அப்போதைய ராஷ்டிர சமித கட்சி (தற்போதைய பிஆர்எஸ்) சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.