தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இப்போது யார் பப்பு.? எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி.. அனல் பறந்த விவாதம்.. - TMC Lok Sabha member Mahua Moitra

மக்களவையில் கூடுதல் மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நாட்டின் வளர்ச்சி குறித்து மத்திய அரசு "பொய்யை" பரப்புவதாக குற்றம் சாட்டினார். அதோடு இப்போது யார் பப்பு என்று கேள்வி எழுப்பினார்.

எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி
எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி

By

Published : Dec 13, 2022, 9:43 PM IST

எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. அதில் மக்களவையில் இன்று (டிசம்பர் 13) 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். அந்த வகையில் மொய்த்ரா, நாட்டின் வளர்ச்சி குறித்து நரேந்திர மோடி அரசு "பொய்யை" பரப்பிவருகிறது. இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியுமே "பப்பு" என்ற வார்த்தையை உருவாக்கின.

இந்த வார்த்தையை இழிவுபடுத்தவும், திறமையின்மையைக் குறிக்கவும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். அப்படியானால், உண்மையான பப்பு யார் என்று நாட்டின் புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்கின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்படி, நாட்டின் தொழில்துறை உற்பத்தி 4 விழுக்காடு சரிந்து 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு வருடத்திற்குள் 72 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. உற்பத்தித் துறையின் மொத்த உற்பத்தி அக்டோபர் மாதம் மட்டும் 5.6 விழுக்காடு குறைந்துள்ளது.

நேற்று (டிசம்பர் 12) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக சந்தைகளில் 50 விழுக்காடு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிற்கு வருவதாக தெரிவித்தார். ஆனால், கடந்த 10 மாதங்களில் 2 லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறந்துவிட்டு வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்டனர். இதையே 2014ஆம் ஆண்டு முதல் எடுத்துக்கொண்டால், 12.5 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளில் செட்டிலாகியிருப்பது தெரியவரும். இந்த அரசாங்கம் ஒவ்வொரு பிப்ரவரியிலும் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவருகிறது. நாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம். அனைவருக்கும் வேலை வாய்ப்பு, சிலிண்டர்கள், மின்சாரம், வீடுகள் கிடைக்கின்றன என்று பொய்யை சொல்லி வருகிறது. ஆனால் உண்மை அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடுகிறது. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:'பிரதமர் மோடியை கொல்லத் தயாராவோம்' என பேசிய விவகாரம் - முன்னாள் அமைச்சர் கைது

ABOUT THE AUTHOR

...view details