கரோனா எனும் பெருந்தொற்று, உலகில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட காரணமாக அமைந்துள்ளது. இதனால் 150 கோடி மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகிவிட்டனர். இது அவர்களின் கல்வியை பாதித்துள்ளது என எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் மருத்துவர் டொனால்ட் ட்வீட் செய்துள்ளார்.
இவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளிகள் மூடப்பட்டிருப்பது குழந்தைகளின் மனம், உடல், அறிவாற்றல் ஆகியவற்றை பாதிக்கும். அது மேலும் அவர்களது வாழ்வில் தொடரவும் வாய்ப்புள்ளது.