தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சீரோ சர்வே முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது - ரன்தீப் குலேரியா - கோவிட்-19 பாதிப்பு

நாட்டில் குழந்தைகள் உள்பட பெரும்பான்மை மக்களுக்கு கரோனா நோய் எதிர்ப்பு செல்கள் உள்ளது சீரோ சர்வே மூலம் தெரியவந்துள்ளதாக மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ரன்தீப் குலேரியா
Randeep Guleria

By

Published : Jun 18, 2021, 5:05 PM IST

நாட்டின் கோவிட்-19 தொற்று பரவலை கண்டறிய சீரோ சர்வே ஆய்வை உலக சுகாதார அமைப்புடன் இணைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மேற்கொண்டது. இது தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா விவரித்துள்ளார்.

சீரோ சர்வே நம்பிக்கை அளிக்கிறது

இது குறித்து குலேரியா கூறுகையில், ”ஆய்வின் முடிவுகள் நம்பிக்கை அளிக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளிடம் பரவல் எவ்வாறு உள்ளது என ஆய்வு தெளிவாகத் தெரிவிக்கிறது. ஒரு சில இடங்களில் 50 விழுக்காட்டுக்கும் மேலான குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு திறனை குறிக்கும் ஆன்டிபாடி செல்கள் உருவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை சில இடங்களில் 80 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளன. நாடு முழுவதும் கிராமப்புறங்களில் சுமார் 62 விழுக்காடுக்கும் மேல் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் உள்ளது தெரியவந்துள்ளது. கிராமப்புரம் வரை தொற்று பரவியதை இது குறிக்கிறது. எனவே, மூன்றாம் அலை குழந்தைகளை பெரிதும் பாதிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:காதலை நிராகரித்ததால் சோகம்: 22 கத்திக் குத்து வாங்கிய பெண்!

ABOUT THE AUTHOR

...view details