கவுகாத்தி:உலகிலேயே அதிக அளவிலான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான அரிவகை உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.
அசாமில் தென்பட்ட அரிய வகை வெள்ளை மான்
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் அரிய வகை வெள்ளை மான் தென்பட்டுள்ளது.
White Hog Deer
அந்த வகையில், பூங்காவின் கோஹோரா பகுதியில் அரிய வகை வெள்ளை மான் தென்பட்டுள்ளது. இந்த மான் ’அல்பினோ ஹாக் மான்’ வகையை சார்ந்தது. இதனை உள்ளூர் மக்கள் வெள்ளை பன்றி மான் என்று அழைக்கின்றனர். இதுகுறித்து தேசிய பூங்காவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தக் காணொலியை மக்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைக் காக்க செயற்கைக்கோள் தொலைபேசி