புதுச்சேரி: சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர், கடந்த வாரம் டெல்லி சென்று உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்தனர்.
அப்போது புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும். பட்ஜெட்டிற்கு ஒப்புதல் தரவேண்டும். புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.
பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு எப்போது? இந்நிலையில் இன்று (ஆக.7) சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரி மாநிலத்திற்கான நிதி உதவி மற்றும் பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்க வேண்டுமென மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். அவர்களும் ஆவணம் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார். அவர்கள் ஒப்புதல் கொடுத்தபிறகு பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:'பன்மடங்கு அதிகரித்த கரோனா தடுப்பூசி உற்பத்தி!'