ஜம்மு காஷ்மீரில் 2019ஆம் ஆண்டில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்குப்பின் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (ஜூன்.24) சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் ஜம்மு காஷ்மீர் தொகுதியை மறுவரையறை செய்து, தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்தலுக்குப் பின் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.