சென்னை: அமெரிக்கா இதுவரை 12 மனிதர்களை நிலவிற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவை தவிற வேறு எந்த நாடுகளும் மனிதர்களை இதுவரை நிலவிற்கு அனுப்பியது இல்லை. மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கான முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்து எப்போது மனிதர்கள் நிலவிற்கு அனுபவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது என்பது குறித்து விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சிவன் கூறுவது என்ன என்பதை விரிவாக பாா்போம்.
பூமியின் துணைக் கோளாய் நிலவும் இருந்து வருகிறது. பல்வேறு நாடுகள் கடந்த 1958ஆம் ஆண்டில் இருந்து நிலவு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இதுவரை இந்தியா, அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் சந்திரன் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தி உள்ளது. உலகின் முதல் முறையாக அமெரிக்கா தான் நிலவு ஆராய்ச்சித் திட்டத்தை நடத்த முயற்சி செய்தது. மேலும் அமரிக்காவின் நாசா கடந்த 64 ஆண்டுகள் நிலவு குறித்த ஆராய்ச்சிச் திட்டங்களில் 40 சதவீதம் தோல்வியை தான் சந்தித்துள்ளது.
முதன் முறையாக 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அமெரிக்கா அப்போலோ திட்டத்தின் படி நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு, ரஷ்யா 1959ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி லூனா 1 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் செலுத்தியது. இதன் மூலம் உலக அளவில் நிலவிற்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றது ரஷ்யா.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டு ஆண்டு தொடர் முயற்சிக்கு பிறகு அப்போலோ-11 என்ற திட்டத்தின் மூலம் மனிதனை முதன் முதலாக நிலவிற்கு அனுப்பியது. இதில் மிகப்பொிய வெற்றியையும் பெற்றது. இதன் மூலம் மனிதன் நிலவில் முதன் முதலாக காலடி எடுத்து வைக்க முடிந்தது. நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு நிலவில் தரையிறங்கியது. அதன் பிறகு 9 மனிதர்கள் நிலவிற்கு என மொத்தம் 12 பேர் நிலவிற்கு சென்று உள்ளார்கள். மனிதர்கள் இறுதியாக 1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி கடைசியாக நிலவிற்கு சென்றுள்ளனர்.
அதன் பின்பு ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கினார்கள். ஆனால், அமெரிக்காவை தவிர்த்து வேறு எந்த நாடும் மனிதர்களை இதுவரை நிலவிற்கு அனுப்ப முடியவில்லை. ஆதனால் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவது தொடர்பான சாத்திய கூறுகளை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அப்போலோ திட்டங்கள்: 1958ஆம் ஆண்டு நிலவிற்கு செல்லும் அமெரிக்காவின் திட்டம் தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு அப்போலோ-11 முதன் முதலாக நிலவிற்கு மனிதர்களை அனுப்பியது. அந்த முதல் திட்டத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு நிலவில் தரையிறங்கியது.
அதைத் தொடர்ந்து, அப்போலோ 12, 14, 15, 16, 17 ஆகிய திட்டங்களில் இதுவரை பஸ் ஆல்ட்ரின், பீட் கான்ராட், ஆலன் பீன், ஆலன் ஷெப்பர்ட், எட்கர் மிட்செல், டேவிட் ஸ்காட், ஜேம்ஸ் இர்வின் ஜான் யங், சார்லஸ் டியூக் ஜீன் செர்னன், ஹாரிசன் ஷ்மிட் என மொத்தம் 12 பேர் நிலவில் கால் பதித்து உள்ளனர். இதற்கு பின்பு இதுவரை யாரும் நிலவுக்கு செல்லவில்லை. மேலும், அப்போலோ-13 திட்டத்தில் எற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக ஆக்ஸிஜன் டேங்க் வெடித்து இத்திட்டம் தோல்வியை சந்தித்தது. அமெரிக்கா அப்போலோ-19 திட்டத்தை தொடங்கியது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணத்தினால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
நிலவில் தரையிரங்கும் சவால்கள்:பூமியில் இருந்து நிலவிற்கு அனுப்பும் விண்கலங்கள் பல்வேறு சவால்களை சந்திக்கிறது. பூமியைப்போல் அங்கு தட்பவெப்ப நிலை என்பது சீராக இருக்காது. விண்வெளிக்கு என்று தனி வெப்பம் மற்றும் தனியான கோட்பாடே உள்ளது. அதேப் போல் நிலவு பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியை சுற்றி வருகிறது. அங்கு ஈர்ப்பு விசை மிக மிக குறைவு. காற்று மண்டலம் கிடையாது. தரையிறங்க பாராசூட்டுகளை பயன்படுத்த முடியாது. பூமி தொடர்ந்து சுற்றி கொண்டு இருக்கிறது. நிலவும் பூமியை சுற்றி வருகிறது அதை கணக்கீடு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.
நாம் ஏவும் விண்கலங்கள் லாங்கிடியூட் - லேட்டிடியூட் கணக்கிட்டு நிலவு எத்தனை நாட்கள் கழித்து எந்த இடத்தில் இருக்கும் என்பதை தீர்மானித்து நிலவின் எந்த பகுதியில் விண்கலத்தை தரையிரங்க செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு ஏற்றது போல் சுற்றுப்பாதையின் தூரம் கணக்கிட்டு பின் விண்வெளியில் உயரத்தை குறைப்பு போன்ற எண்ணில் அடங்காத சவால்கள் உள்ளது. இத்தனை சாதனைகளையும் கடந்து தற்பொது இந்தியாவின் சந்திரயான்-3 விணகலம் தென் துருவத்தை அடைய தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மனிதர்களை நிலவிற்கு அழைத்துச் செல்ல இந்தியாவின் திட்டம் என்ன?இது குறித்து சந்திராயன் 1-இன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையிடம் தொலைப்பேசி வாயிலாக கேட்டப்போது, நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு சந்திராயன்-3 மிகவும் உதவியாக இருக்கும், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு சந்திராயன்-3 கொடுக்கும் ஆய்வு முடிவுகள் மிகவும் முக்கியமானது ஆகும். நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. அதை உறுதி செய்த பிறகு, புதிய திட்டமாக ஒரு சிறிய ரோபோவை நிலவுக்கு அனுப்பி அதனை நிலவில் இருந்து லைஃப் போட் வழியாக மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாக அடைய முடிந்தால், இந்தியாவின் இஸ்ரோ அடுத்தக்கட்ட ஆராய்ச்சியாக நிலவிற்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தினை தொடங்கும்.
அமெரிக்கா, ரஷ்யா போன்று நாம் வானியல் தொழில் நுட்பத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறோம். அதேப்போல் ககன்யான் திட்டத்தின் மூலம் அருகில் இருக்கும் விண்வெளிக்கு (Near Space) மனிதர்களை அழைத்து செல்லும் திட்டம் ஆகும். இந்த ககன்யான் திட்டம் வெற்றி பெற்றால் அதைத் தொடர்ந்து நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தினை விரைவாக செயல்படுத்த எதுவாக இருக்கும் என அவர் தொிவித்தார்.
இது குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறியதாவது: நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது குறித்து இந்தியா தீவிர ஆய்வு ஈடுபட்டு வருகிறது. மேலும் 63-ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பட்ட அப்போலோவின் திட்டமானது மிகப்பெரிய திட்டம். அதற்காக செலவிட்ட தொகையும் அதிகம். தற்போது, இந்தியாவில் மனிதர்களை நிலவிற்கு அழைத்து செல்லும் அளவிற்கு ராக்கெட் இல்லை. மேலும், இந்தியா வானியற்பியலில் அடைய வேண்டிய இலக்கும் அதிகமாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நிலவில் விழுந்து நொறுங்கியது லூனா 25 விண்கலம் - தகர்ந்தது ரஷ்யாவின் கனவு!