புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் புதுச்சேரி வருகை தந்தனர். இக்குழு நேற்று (டிச.22) புதுச்சேரி தலைமைச் செயலர், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது ? - சட்டப்பேரவை தேர்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு உமேஷ் சின்ஹா தலைமையில் புதுச்சேரி வருகை தந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு புதுச்சேரி அதிகாரிகளுடன் ஆலோசனை
இந்தகூட்டத்தில், காங்கிரஸ், திமுக, என்ஆர் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியினர், தேர்தல் அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.