சென்னை: இந்தியாவில் இன்னும் சில மணி நேரங்களில் 2024 புத்தாண்டு தொடங்க உள்ளது. ஆனால், பல நாடுகள் தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
2024 புத்தாண்டை வரவேற்ற முதல் நாடு: உலகிலேயே 2024 புத்தாண்டை வரவேற்ற முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவுகள் அமைந்துள்ளது. இங்கு தற்போது, 2024 புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி இன்று (டிச.31) மாலை 3.30 மணிக்கு புத்தாண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
2024 புத்தாண்டை கடைசியாகக கொண்டாடும் நாடுகள்: 2024 புத்தாண்டு உதயமாகும் கடைசி நாடாக அதே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பேக்கர் தீவு அமைந்துள்ளது. இந்திய நேரப்படி நாளை (ஜனவரி 1) மாலை 5.30 மணிக்கே இங்கு புத்தாண்டு தொடங்கும். ஆனால், இங்கு மனிதர்கள் யாரும் இல்லை என்பதால், அதற்கு முன்பாக உள்ள சிறிய தீவான அமெரிக்கன் சமோவாதான் 2024 புத்தாண்டைக் கொண்டாடும் கடைசி நாடாக அமைகிறது. இங்கு, இந்திய நேரப்படி நாளை (ஜனவரி 1) மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு தொடங்குகிறது.
ஏன் 2024 புத்தாண்டு கிரிபாட்டி தீவில் முதலில் தொடங்கியது?நேரம் என்பது பல விதமான மண்டலமாக (zone) பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி +5.30 என்பது மண்டலமாக (zone) உள்ளது. இந்த மண்டலங்கள் (zone) கிரீன்விச் (Greenwich) அடிப்படையில் நேரங்களாக கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில், தற்போது கிரிபாட்டியில் 2024 புத்தாண்டு தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.