இந்திய துணை கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், விலங்குகள் ரூபம் கொண்ட கடவுள்களையும், பல இடங்களில் விலங்குகளையே கடவுளாகவும் வழிபட்டு வருகின்றனர். பெரும்பாலான கடவுள்கள் விலங்குகளையே தங்கள் வாகனங்களாக கொண்டிருக்கின்றன. அத்தகைய உயிரினங்களே கடவுள்களுக்கு பலியிடப்படும் முரண்பாடும் நிலவத்தான் செய்கிறது.
நாம் அஞ்சி ஓடும், நெருங்க விரும்பாத உயிரினங்களை சில கோயில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இக்கோயில்களுக்குச் சென்றால், அங்கு முதலையை வேட்டையாடும் உயிரினமாக இல்லாமல், பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாத நட்பான உயிரினமாக காணலாம். எலிகளை புனிதமானவையாக கருதி எலி குடித்த பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதை காணலாம்.
கேரளாவின் காசர்கோடில் உள்ள அனந்தபுரா ஏரி கோயிலில் அற்புதமான மனித-விலங்கு உறவைக் காணலாம். அந்த கோவிலில் உள்ள குளத்தில் வாழும் முதலை பூசாரி அழைத்தால் அமைதியாக 'அரிசி நிவேதம்' அல்லது பிரசாதம் சாப்பிடுகிறது. 75 வயது இருக்கும் என்று கருதப்படும் இந்த சாதுவான சைவ முதலையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோயிலின் சன்னதியை மூடிய பிறகே ’பாபியா’ என்ற முதலை உள்ளே நுழைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும், முதலையின் புகைப்படங்கள் வெளியாகும் வரை பக்தர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதன் தோற்றத்தை தெய்வீகமாகக் கருதுகின்றனர் மற்றும் பாபியா என்ற முதலையின் சாட்சியத்தால் ஆசீர்வாதங்கள் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பப்படுவதால், அது தோன்றும்போது பூசாரிகள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இருப்பினும், கோவில்களில் விலங்குகள் மீதான இத்தகைய தனித்துவமான அன்பும் மரியாதையும் முதலையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ராஜஸ்தானின் பிகானரின் தேஷ்நோக் நகரில் அமைந்துள்ள கர்னி மாதா கோயிலில், எலிகள் நோய் பரப்பும் உயிரினமாக கருதப்படாமல் போற்றப்படுகிறது. "கபாஸ்" என்று அழைக்கப்படும், சுமார் 20,000 கருப்பு எலிகள் கோயிலில் வசிக்கின்றன, பார்வையாளர்கள், பெரும்பாலும் அதிக தூரம் பயணித்து, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
இது மட்டுமின்றி, மனிதனின் உற்ற நண்பனான நாய் க்கு கர்நாடகாவின் சன்னபட்னா நகரில் உள்ள ஒரு கோவிலில் இடம் கிடைத்துள்ளது. அங்கு உள்ளூர்வாசிகள் நாய்களுக்கு கோவில் அமைத்து அங்கு இரண்டு நாய்களின் சிலைகளை வைத்து வழிபடுகின்றனர். சிலைகளில் ஒன்று ஆக்ரோஷமான தோரணையுடனும் மற்றொன்று அமைதியாகவும் காட்சியளிக்கிறது.
சத்தீஸ்கரில் உள்ள மற்றொரு கோவிலில், ஒவ்வொரு நாளும் ஆரத்தியின் போது சில கரடிகள் வளாகத்திற்கு வந்து பிரசாதத்தை சாப்பிடும் விசித்திரமான நிகழ்வு நடக்கிறது. பின்னர் இந்த கரடிகள் கோவிலை ஒன்பது முறை வலம் வந்து பக்தர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாமல் அமைதியாக வெளியே சென்று விடுகிறது.
மதுரை மாவட்டத்தில் அழகர் கோவிலுக்கு பக்தர்கள் காளை கன்றுகள் மற்றும் பசுக்களை காணிக்கை செலுத்தும் தனித்துவமான மத பாரம்பரியத்தின் காரணமாக சேவல் மற்றும் காளைகள் அமைதியான தஞ்சம் அடைந்தன. பசு மடங்களில் பசுக்கள் பராமரிக்கப்படும் போது, பக்தர்கள் உணவு வழங்குவதால், காளைகள் கோவில் வளாகத்திற்குள் சுற்றித் திரிகின்றன.