தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சக்கர நாற்காலி இல்லாமல் கூடைப்பந்து விளையாட்டு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரக்யா சிங் தாக்கூர்!

பாஜக எம் பி பிரக்யா சிங் தாக்கூர் பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியின் உதவியுடனேயே வலம் வரும் நிலையில், உற்சாகமாக அவர் எழுந்து நின்று கூடைப்பந்து விளையாடும் காணொலி வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Pragya Singh Thakur
Pragya Singh Thakur

By

Published : Jul 3, 2021, 2:33 PM IST

போபால் (மத்தியப் பிரதேசம்): தன் அறிக்கைகள், பேச்சுகள் மூலம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் பாஜக எம் பி பிரக்யா சிங் தாகூர், தற்போது காணொலி ஒன்றின் காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சக்கர நாற்காலியும் கூடைப்பந்து விளையாட்டும்

உடல்நலக் குறைவு காரணமாக பல ஆண்டுகளாக சக்கர நாற்காலி உதவியுடனேயே வலம் வரும் பிரக்யா, முன்னதாக போபால் சாகேத் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சில வீரர்கள் மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி செய்வதைக் கண்டு, உற்சாகத்தில் தானும் களமிறங்கி பந்தை வாங்கி விளையாடி, மிகச்சரியாக கோல் செய்தார்.

கூடைப்பந்து விளையாடும் பிரக்யா சிங் தாக்கூர்

வைரல் காணொலியால் சர்ச்சை

இந்நிலையில், பிரக்யா கூடைப்பந்து விளையாடும் காணொலி வெளியாகி, வைரலான கையோடு மறுபுறம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, "போபாலின் பாஜக எம்பி பிரக்யா சிங்தாக்கூரை சக்கர நாற்காலியில் பார்த்து வந்தேன், ஆனால் இன்று போபாலின் விளையாட்டு அரங்கம் ஒன்றில் அவர் கூடைப்பந்து விளையாடியதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

இதுவரை, சில காயம் காரணமாக அவரால் சரியாக நிற்க, நடக்க முடியாது என்றே கேள்விப்பட்டு வந்தேன். கடவுள் அவரை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உடல்நிலை காரணமாக விலக்கு

தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வரும் 2008ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் பிரக்யா சிங்கும் ஒருவர் ஆவார்.

மும்பையில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் தொடர்ந்து நேரில் ஆஜராகி வரும் பிரக்யா சிங் தாக்கூருக்கு, முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல் நிலை, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் காணொலி வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க:கேரள பாஜக மீதான ஹவாலா வழக்கு: மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனுக்கு நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details