ஹைதராபாத் :ஆண்ட்ராய்டில் லாக் செய்யப்பட்ட சேட்களுக்கு ரகசிய குறியீட்டை உருவாக்கும் புதிய பக்கத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ரகசிய குறியீட்டை உருவக்குவது, லாக் செய்யப்பட்ட சேட்களை எளிதில் கண்டறிய உதவுகிறது.
கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள மெட்டாவின் வாட்ஸ் அப் நிறுவனம், சமீக காலங்களில் புது அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப்பின் லாக் செய்யப்பட்ட சேட்களுக்கு ரகசிய குறியீட்டை உருவாக்கும் புதிய பக்கத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த ரகசிய குறியீடு லாக் செய்யப்பட்ட சேட்களுக்கு தனிப்பட்ட பாஸ்வோர்டு வசதியை அளிக்க அனுமதிக்கிறது.
WABetaInfo படி, வாட்ஸ் அப் ஒரு புதிய பக்கத்தை அறிமுகப்படுத்துகிறது. இது பயனாளர்களின் லாக் செய்யப்பட்ட சேட்களுக்கு ரகசிய குறியீட்டை அளிக்கிறது. இந்த ரகசிய குறியீடு போடுவதன் மூலம் லாக் செய்யப்பட்ட சேட்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.
இதையும் படிங்க:"பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வோம்" - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்!